1146 மதிப்பெண் பெற்று வி.களத்தூர் மாணவி அப்ரின் பரகத் அபார சாதனை
வி.களத்தூரைச் சேர்ந்த கவிஞர் நிலாப்பிரியன் (எ) சாதிக் பாஷா அவர்களின் மகள் அப்ரின் பரகத் பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். தற்பொழுது வந்துள்ள தேர்வு முடிவுகளின்படி 1146 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார்.
இவர் 2009 ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று பெரம்பலூர்வட்டத்தில்முதலிடம் பெற்று துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு.
| AFRIN BARKATH S ( 489417 ) | |||
| Subject | Theory | Practical | Total |
| LANGUAGE | 188 | ||
| ENGLISH | 185 | ||
| PHYSICS | 147 | 050 | 197 |
| CHEMISTRY | 147 | 050 | 197 |
| BIOLOGY | 136 | 050 | 186 |
| MATHEMATICS | 193 | 193 | |
| TOTAL | 1146 | ||
| RESULT | PASS | ||
உயிரியல் பாடத்தில் தான் எதிர்ப்பார்த்த மதிப்பெண் பெறாததால் மறுகூட்டல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்று மாணவி அப்ரின் பரகத் தெரிவித்தார்.
வாழ்த்து தெரிவிக்க : சாதிக் பாஷா - 055 9450549
