அஸ்ஸலாமு அலைக்கும்
மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு : இலக்கிய ஆர்வலர்கள் உலகெங்கிலும் இருந்து விரைந்தனர்.
மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மே 20 முதல் 22 வரை வெகு சிறப்புற நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், கேப்டன் அமீர் அலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக பொதுச்செயலாளர் சாயபு மரைக்காயர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் பேரா. அப்துஸ் ஸமத், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர் பீ.மு. அஜ்மல் கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கிய அணியின் ஏம்பல் தஜம்மல் முஹம்மது, துபாய் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், தேசிய நல்லாசிரியர் முதுகுளத்தூர் எஸ். அப்துல் காதர் உள்ளிட்ட பலர் வருகை புரிந்துள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பாங்காக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்க சிறப்பு குழுவினர் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
விரைவில் மாநாட்டு தகவல்களை மலேஷியாவில் இருந்து வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
மாநாடு சிறப்புடன் நடைபெற அனைவரும் பிரார்த்திப்போம்.
Muduvai hidayath
No comments:
Post a Comment