Tuesday, May 10, 2011

MISS AFRIN BARAKATH OF V.KALATHUR ACHIEVED 1146:TN +2 RESULT


1146 மதிப்பெண் பெற்று வி.களத்தூர் மாணவி அப்ரின் பரகத் அபார சாதனை


வி.களத்தூரைச் சேர்ந்த கவிஞர் நிலாப்பிரியன் (எ) சாதிக் பாஷா அவர்களின் மகள் அப்ரின் பரகத் பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். தற்பொழுது வந்துள்ள தேர்வு முடிவுகளின்படி 1146 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். 


இவர் 2009 ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்  பெற்று பெரம்பலூர்வட்டத்தில்முதலிடம் பெற்று  துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு.

AFRIN BARKATH S    ( 489417 )
SubjectTheoryPracticalTotal
LANGUAGE

  188
ENGLISH

  185
PHYSICS 147 050   197
CHEMISTRY 147 050   197
BIOLOGY 136 050   186
MATHEMATICS 193 
  193
TOTAL 
1146
RESULTPASS 

மாணவி அப்ரின் பரக்கத்தின் தந்தை சாதிக் பாஷா கூறும்போது, பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது போன்று இந்தமுறையும் முதலிடம் பிடிக்கவே முயற்சி செய்து கடுமையாக படித்து வந்தார்கள் எனது மகள், அனால் அது முடியாமல் போயிற்று என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

உயிரியல் பாடத்தில் தான் எதிர்ப்பார்த்த மதிப்பெண் பெறாததால் மறுகூட்டல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்று மாணவி அப்ரின் பரகத் தெரிவித்தார்.
வாழ்த்து தெரிவிக்க :  சாதிக் பாஷா  -  055 9450549

No comments:

Post a Comment